உலக செய்திகள்
- அந்தமான் நிக்கோபார் தீவுகளை, பாபுக் புயல்(Babuk cyclone) தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையமானது ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை வழங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
- இந்திய புலம்பெயர் மக்கள் மீது கவனத்தைக் கொண்ட, உலகலாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணையதளமாகிய “Remit 2 India’’- விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் கடன் உதவி அளிப்பதற்கான, மிஷன் சக்தி மாநாடு ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு – மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்குதல்.
- பெண்களுக்கு பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் கிடைக்க வழி செய்யும், “உஜ்வால சானிடரி நாப்கின் யோஜனா”(Ujjwala Sanitary napkin Yojana) என்ற திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
- சூரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க, மகாராஷ்டிர மாநில அரசானது “அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா” (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தியாவின் முதல் அதிவேக விரைவு இரயில் சேவை தேஜாஸ்(Tejas). இது 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. இந்த இரயில் சேவையானது தமிழகத்தில் சென்னை- மதுரை வழித்தடத்தில் ஜனவரி 27 முதல், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது
விளையாட்டு செய்திகள்
- மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – 2019(2019 – Maharashtra Open Tennis) போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுவில் கெவின் ஆண்டர்சனும் (தென்னாப்பிரிக்கா) ஆண்கள் இரட்டையர் பிரிவுலும் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடியும் (இந்தியா) வெற்றிபெற்றனர்.