உலக செய்திகள்
- பாகிஸ்தான் மற்றும் சீனா ஒன்றிணைந்து “JF Thunder – 17” என்னும் ஒற்றை எஞ்சின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.
- “கதக்” என்னும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான “அனிந்த்டே நியோகி அனாம்” (Anindita Neogy Anaam) என்பவருக்கு தேசிய நிருத்ய ஷிரோமணி – 2019 (National Nritya Shiromani Award – 2019) என்னும் விருது வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
- இந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான “INS-விராட்”, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் (IIT) சார்பில் “சாஸ்ட்ரா – 2019” என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ளது.
- இந்திய இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக K. யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆக்ஸிஸ் வங்கியின் CEO-வாக அமிதாப் சௌத்ரி (Amitabh Chaudhry) நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- கூகுள், ஆப்பிள், அமேசான், பேஸ்புக் போன்ற பெரிய இணை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக “GAFA வரி” எனப் பெயரிடப்பட்ட புதிய வரிவிதிப்பை “பிரான்ஸ்” நாடானது அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சமீபத்தில் நாசா அனுப்பிய “ஒசிரிஸ்-ரே” எனப்படும் செயற்கைகோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள “பென்னு” என்றழைக்கப்படும் குறுங்கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சாதனைப் படைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதிவேகமாக ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ஒட்டுமொத்த டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேசப் போட்டிகளில் 19 ஆயிரம் ரன்களை 432 இன்னிங்ஸ்களில் எட்டினார். ஆனால், விராட் கோலி தனது 19 ஆயிரம் ரன்களை சச்சினைக் காட்டிலும் 33 போட்டிகள் குறைவாக 399 இன்னிங்ஸ்களிலேயே இன்று எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
- 17வது ஆசிய கோப்பை கால்பந்து – 2019 போட்டிகள், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற உள்ளது.
இரங்கல்
- சச்சின் டெண்டுல்கரின் நல்லாசிரியரும் ஆதர்சமும், கிரிக்கெட் பயிற்சியாளருமான ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையில் காலமானார்.