உலக செய்திகள்
- உலக அளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் முதலிடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அரசு கரும்பு பானத்தை (SugarCane Juice) தேசிய பானமாக (National Drink) அறிவித்துள்ளது.
- உலக எஃகு சங்கம் வெளியிட்ட 2018ம் ஆண்டிற்கான எஃகு உற்பத்தியில் இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சீனா முதலிடத்தில் உள்ளது
- நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019 இல் சிறந்த காட்சிக்கான(Best in Show) விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது
தேசிய செய்திகள்
- இந்தியாவின் ஜவுளித் தயாரிப்புகளை காட்சிப்படுத்த மும்பாய்க்கு அருகிலுள்ள எலிஃபண்டா குகைகளில் "கைவினைஞர் பிரசங்கம்" (Artisan Speak) தொடங்கப்பட்டது.
- தமிழ்நாட்டிற்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நடத்திய "ஸ்வஸ்த் பாரத் யாத்ரா"வில் (Swasth Bharat Yatra) சிறப்பாக பணற்றியதற்காக விருது வழங்கப்பட்டது.
- புலிகள் பாதுகாப்பு பற்றிய மாநாட்டின் சர்வதேச கண்காட்சி புது டெல்லியில் துவங்கியது
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்மானது (ICAR) தேசிய வேளாண்மை உயர் கல்வி திட்டத்தை (NAHEP) புதுடெல்லியில் தொடங்கியது
- திலிப் சதராங்கனி ஃபெடரல் பேங்க்(Federal Bank) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- 2018ம் ஆண்டுக்கான, சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது இந்து கோபனின் “மணியன் பிள்ளையட ஆத்ம கதா” என்ற மலையாள நூலினை “திருடன் மணியன் பிள்ளை” என்ற பெயரில் மொழி பெயர்த்தற்காக முயூசிஃப்பிற்கு (கன்னியாகுமரி) வழங்கப்பட்டது.
- பக்கே பகா என்ற பறவைகளின் திருவிழா “பக்கே பகா ஹார்ன்பில்” என்ற பெயரில் அருணாச்சல பிரதேசதில் கொண்டாடப்பட்டது
- பாதுகாப்பு அமைச்சகமானது 70வது குடியரசு தினத்தில் “RDP இந்தியா – 2019” எனும் கைபேசி செயலியை தொடங்கியுள்ளது.
- இந்தியா மற்றும் 12 ஆப்ரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் இந்தியா ஆப்ரிக்கா களப்பயிற்சியானது (IAFTX – 2019 – Indian Africa Field Training Exercise) புனேவில் (மஹாராஷ்டிரா) நடைபெறவுள்ளது.
வர்த்தக செய்திகள்
- மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (GSTAT – Goods and Service Tax Appellate Tribunal) டெல்லியில் உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியினை 18% டிலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
இரங்கல்
- முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
முக்கிய தினங்கள்
- ஜனவரி 27 - சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம்