RRB Tamil Current Affairs 2nd January 2019

தேசிய செய்திகள்
  1. இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மிக அதிக அளவிலான இணைய இணைப்புடன் கூடிய கைபேசிகள் பயன்பாட்டில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்திலும் தமிழகமானது 2வது இடத்திலும் உள்ளதாக மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  2. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை, மத்திய பிரதேசத்தின் தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.
  3. மத்திய தகவல் ஆணைத்தின் புதிய தலைமை ஆணையராக “சுதிர் பார்கவா” நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தெலுங்கான மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக “T.B.N. ராதா கிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. விமான எரிபொருள் விலை 7 சதவீதம் குறைக்கப்பட்டது.
  6. நியூயார்க்கின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “டிஜிட்டல் மாற்றத்திற்கான ஹக்கத்தான் விருது” நோயைக் கண்டறிதலின் போது நோயாளிக்கு ஏற்படும் வலியின் துல்லியத் தன்மையை கண்டறியக் கூடிய கருவியை வடிவமைத்ததற்காக இந்திய அமெரிக்கரான “மகும் சித்கி” என்பவருக்கு வழங்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
  1. வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவானது யுன்ஹாய் – 2 என்ற செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) , 2018ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனை “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post