RRB Tamil Current Affairs 28th January 2019

உலக செய்திகள்
  1. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ரயில் “உத்தரதேவி” தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
  2. உலக அளவில் அரசு நிதியில் இயக்கக் கூடிய சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது 9வது இடம் பிடித்துள்ளது.
  3. மொழிகள் மற்றும் பண்பாடுகள் அழிவதை தடுப்பதற்கான உலகளாவிய கருத்தரங்கம் பிரான்ஸ் நாட்டின் யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
  1. விடுதலைக்குப் பின் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திஹார் சிறைக் கைதிகளுக்கு டெல்லி அரசு யோகா கல்வி அளிக்க உள்ளது.
  2. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த “3 ஆண்டு ஒத்துழைப்பு திட்டம்” (3 year strategic programme) செயல்படுத்தப்பட உள்ளது.
  3. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, 2019ம் ஆண்டில் பிரணாப் முகர்ஜி (முன்னாள் குடியரசுத் தலைவர்), நானாஜி தேஷ்முக் (ஜன சங்க தலைவர்) மற்றும் புபேன் ஹசாரியா (பிரபல இசையமைப்பாளர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நேமுரா தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்டில் சென்னையைச் சேர்ந்த செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
  2. ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
  3. இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் பிரான்ஸ் நாட்டு வீரர் செபாஸ்டியன் ஓஜிர் வெற்றி பெற்றார்.
  4. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னீஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Previous Post Next Post