RRB Tamil Current Affairs 27th January 2019

உலக செய்திகள்
  1. சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் மறுவாழ்விற்காக கத்தார் நாடு 50 மில்லியன் டாலர் (ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில், ரயில் 18க்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரை சூட்டியுள்ளார்
  2. பஞ்சாபின் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்த தமிழரான பி.தினேஷ்குமாருக்கு உபி அரசு பாராட்டுப்பதக்கம், விருது அளித்துள்ளது.
  3. தோப்பூரில் (மதுரை) ரூ.1264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
  4. “அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்” என்ற சவுபாக்கியா திட்டத்தின் கீழ் 25 மாநிலங்களில் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  5. பொருளாதாரத்தில் நலிவடைந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
  6. யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த “பிரிஷாவிற்கு” ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
  7. வீர தீர செயல் புரிந்த மூன்று இளைஞர்களுக்கு (சூரியக்குமார், ஸ்ரீதர் மற்றும் ரஞ்சித் குமார்) “அண்ணா விருது” வழங்கி முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் கௌரவித்தார்.
வர்த்தக செய்திகள்
  1. இந்திய தபால் துறை வங்கி 25 லட்சம் கிளைகளை நாடு முழுவதும் தொடங்கி செயல்படுத்தி வருகிறது
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
  2. இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
Previous Post Next Post