உலக செய்திகள்
- இந்தோ - திபெத் எல்லை போலீசார், லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.
தேசிய செய்திகள்
- தமிழ் கவிஞரும், எழுத்தாளருமான ராஜாத்தி சல்மாவுக்கு மகாகவி கன்னையாலால் சேதியா விருது வழங்கப்படவுள்ளது.
- தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தி ராணுவத்தில் பணியாற்றி, தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிர்நீத்த வீரர் லேன்ஸ் நாயக் நசீர் அகமதுவுக்கு குடியரசு தின விழாவில் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா, தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.
- மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் ஒன்று கூடி சுதந்திரப் போராட்டத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் உருவ சித்திரங்களை தத்ரூபமாக உருவாக்கினர்.
- முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டிஸ்கர் மாநில நாட்டுப்புற பாடகி தீஜன்பாய் தொழிலதிபர் அணில் குமார் மணிபாய் உள்ளிட்ட 4 பேருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி நம்பிநாராயணன், மலையாள நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் உள்ளிட்ட 14 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்.
- நடிகர் பிரபுதேவா, பாடகர் சங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பரத நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி மருத்துவர்கள் ராமசாமி வெங்கடசாமி, ஆர்.வி. ரமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுகிறது.
- மறைந்த நடிகர் காதர் கான். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 94 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- விளையாட்டுத் துறையில் 9 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலையேறும் வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்மபூஷனும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது.
வர்த்தக செய்திகள்
- இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ருனோஜாய் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக சிங்கப்பூர் அமைச்சர் கன் கிம் யாங் தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ((naomi osaka)) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.