தேசிய செய்திகள்
- அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் என்ற சாதனையை ஐபிஎஸ் அபர்ணா புரிந்துள்ளார்
- இந்தியப் பெண்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்களை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதுமே நோக்கமாகக் கொண்ட, மகளிருக்கான குரல் விருதானது, அபீஜெய் கொல்கத்தா இலக்கிய திருவிழாவில், அமெரிக்காவில் உள்ள இந்திய கவிஞரான “ரஞ்சனா முரளிக்கு” வழங்கப்பட்டுள்ளது.
- உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை (பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை ஆய்வு செய்வதற்காக, பீகார் துணை முதல்வாரன “சுஷில் மோடி” தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
- இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்ரோசாப்ட் இந்தியாவானது, அதன் ரீவேவ் (re-weave) திட்டத்தின் கீழ், re-weave.in என்ற மின்னனு வர்த்தக தளத்தை தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- 2019-20 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கலாம் என கிரிசில் தரச்சான்று நிறுவனம் கணித்துள்ளது
- முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது.
விளையாட்டு செய்திகள்
- மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக கோல்ஃப் சாம்பியன் ஷிப் போட்டியில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் “கார்த்திக் சிங்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- 2020ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தலைவராக, பிரேந்திர பிரசாத் பைஷ்யா(இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.