RRB Tamil Current Affairs 22nd January 2019

உலக செய்திகள்
  1. பாகிஸ்தானின் 26-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஆசிப் சையீத் கோஷாவிற்கு, பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிப் அல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
  2. G77 குழுவின் தலைமைப் பதவியை எகிப்திய அரபுக் குடியரசிடமிருந்து பாலஸ்தீனம் கைப்பற்றி உள்ளது.
தேசிய செய்திகள்
  1. சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் “இராணுவ தொழில் வழித்தடம்” திருச்சியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
  2. மத்திய அமைச்சரவை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் சுரங்கப் பாதுகாப்பை மேம்படுத்திட குயின்ஸ்லாந்து(ஆஸ்திரேலியா) மகாணத்துடன் புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதலை அளித்துள்ளது.
  3. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின்படி, இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில், பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (United Nations – Convention to Combat Desertification – UNCCD) உறுப்பினர்கள் மாநாட்டின் (Conference of Parties – CoP) 14-வது பதிப்பை நடத்த உள்ளது.
  4. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின்படி, இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில், பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (United Nations – Convention to Combat Desertification – UNCCD) உறுப்பினர்கள் மாநாட்டின் (Conference of Parties – CoP) 14-வது பதிப்பை நடத்த உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய நிதியமைச்சகம், ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் முறை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுட்டுரையில் “உங்கள் பட்ஜெட்டை அறியவும்” (Know Your Budget) என்ற தொடரை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 16-வது டாடா மும்பை மாரத்தான் போட்டிக்கான நிகழ்ச்சித் தூதுவராக ஆறுமுறை உலக பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியின் சாம்பியனும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான C மேரிகோம் நியமிக்கப்பட்டார்.
Previous Post Next Post