உலக செய்திகள்
- வங்கதேசத்தின் பிரதமராக 3-வது முறையாக ஷேக் ஹசினா பொறுப்பேற்கிறார்.
- இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை இன்று வழங்கியது.
- உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்
- ரஷியாவிடம் இருந்து 600 டாங்கிகளை பாகிஸ்தான் வாங்குகிறது.
தேசிய செய்திகள்
- ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கின.
- நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவாவையும், 4 தகவல் ஆணையர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.
- குஜராத் பள்ளி கூட வகுப்பறையில் புது வருட தொடக்கத்தில் இருந்து மாணவ மாணவிகள் உள்ளேன் ஐயா என்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு செய்திகள்
- டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.
- டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சாதனை படைத்துள்ளார்.
- ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீராங்கனை என ஐசிசியின் இரட்டை விருதை வென்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா.
- 80–வது தேசிய கேடட் மற்றும் சப்–ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சண்டிகாரில் நடந்தது. இதில் தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்
இரங்கல்
- பழம்பெரும் இந்தி நடிகரும் கதாசிரியருமான காதர் கான் காலமானார்
- தாதா சாஹேப் விருது வென்ற பிரபல வங்கமொழி இயக்குநர் மிருணாள் சென் காலமானார்