உலக செய்திகள்
- அண்டார்டிகாவின் உயரமான எரிமலையான சிட்லி (Sidley) எரிமலையை ஏறி சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை “சத்யரூப் சித்தாந்தா (Satyarup Siddhanta) என்பவர் பெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
- பொதுப்பிரிவில் (இந்தியா) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா (124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா)-விற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- மத்தியப் பிரதேச மாநில அரசானது, 50,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக “ஜெய் கிஷன் ரின் முக்தி யோஜனா” (Jai Kisan Rin Mukti Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு தாவரங்களை அகற்றுவதற்காக, சென்னை உயர்நீதிமன்றமானது “செருகுரி ராகவேந்திரா பாபு” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
- “JLL Consultant” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மிகவும் மாறும் நகரங்களின் பட்டியலில் (world’s most dynamic city) கர்நாடகாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
- பெண் தொழிலாளர்களின் பொருட்களை விற்பதற்கு மற்றும் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பதற்கு, வர்த்தகத் துறை அமைச்சகமானது, “WOMANIYA ON GEM” என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- புனே(மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற “கேலோ இந்தியா யூத்” போட்டியில், 81 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தின் “தர்ஷினி” என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.