உலக செய்திகள்
- ரூ. 46 கோடி செலவில் சுற்றுலாத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் (யாத்திரை புனரமைப்பு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம்) ஆகிய திட்டங்களை மேகாலயா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் சுற்றுலாதுறை அரசு தொடங்கியது.
- நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி “பூர்ண சந்திரா தாபா” (Purna Chandra Thaba) – விற்கு இந்திய இராணுவத்தின் சார்பில், இந்திய ராணுவ ஜெனரல் விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னையைச் (IIT – சென்னை) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
- 25 வது உலக கூட்டமைப்பு மாநாடு மும்பையில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
- 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. ஆனந்த் (C.A. Anant) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 29 வது இந்திய பெயிண்ட் மாநாடு - 2019 உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் தொடங்கப்பட்டது
- சர்வதேச எல்லைகளைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காக எல்லை பகுதி மேம்பாட்டு திட்டம் (BADP) இன் கீழ் 17 மாநிலங்களுக்கு 98 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளராக “ஜெயதீப் கோவிந்த்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மனிதனை விண்ணிற்கு செலுத்தும் இஸ்ரோவின் “ககன்யான் திட்ட” செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Centre) பெங்களுரில் இஸ்ரோ அமைத்துள்ளது.
- வறுமையை ஒழித்து அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் அடிப்படை வருமானம் அளிப்பதற்காக, சிக்கிம் மாநிலமானது “உலக அடிப்படை வருமானம்” (Universal Basic Income) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
- மகளிர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான முதல் முறையாக சண்டிகரில் ஆசிய மகளிர் ஆணையம் சார்பில்
- 'இந்திய பெண்கள் கரிம விழா' கொண்டாடப்பட்டது
வர்த்தக செய்திகள்
- இந்திய பொருளாதாரத்தை 2035ல், 10 லட்சம் கோடி டாலராக உயர்த்தபடும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்
- உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கர்னெல் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.