உலக செய்திகள்
- ஷென்லி அமைப்பு வெளியிட்டுள்ள “உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்” பட்டியலில், இந்தியாவானது, மொத்தம் 190 நாடுகளில் 79வது இடம் பிடித்துள்ளது.
தேசிய செய்திகள்
- சந்திரிகா சுப்ரமணியம் என்பவர் எழுதிய “இணைய குற்றங்களும், இணைய வெளிச் சட்டங்களும்” என்ற நூலானது, டாக்டர். அப்துல்கலாம் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் “நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை” தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
- பொருளியல் புலனாய்வு அமைப்பின், (EIU – Economist Intelligence Unit), 2018ம் ஆண்டின் ஜனநாயகக் குறியீட்டு (EIP Democracy Index 2018) பட்டியலில் இந்தியா 41வது இடம் பிடித்துள்ளது.
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரான மலாலா யூசுப் (Malala Yousafzai) எழுதிய “WE ARE DISPLACED” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
- பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்திவரும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை, இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனமும் எல் அண்ட் டி நிறுவனமும் தயாரிக்க உள்ளன.
வர்த்தக செய்திகள்
- உலக வங்கி வெளியிட்டுள்ள, தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில்(2019) இந்தியாவானது 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 77வது இடத்தில் உள்ளது.
- பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக செபி (SEBI) அமைப்பானது, ஷங்கர் டே (Shankar De) என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- அனைத்து இந்திய குத்துச்சண்டை சங்கம்(AIBA – All India Boxing Association) வெளியிட்டுள்ள, சர்வதேச குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மேரிகோம் முதலிடம் பிடித்துள்ளார்.
- சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.