உலக செய்திகள்
- உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 ) ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
- ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக K. ஹஞ்சுரா (M.K. Hanjura) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
- சமூக ஊடகங்களில் “மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை” அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “WEB WONDER WOMAN” என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
- இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India’s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது (BYORUNG – BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.
- சாலை விதிகளை மீறி செயல்படுபவர்களை பற்றி புகார் அளிக்க உதவுவதற்காக, “போலீஸ் இ-கண்” (Police E-Eye App) என்ற செயலியை கோயம்புத்தூர் நகர போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள 26 வயதான மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
- புவிசார் தொடர்புகளுக்கான ஸோங்ஸிங் 2 டி ((Zhongxing-2D)) என்ற புதிய செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2018 – 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3 சதவீதமாகவும், 2019 – 2020ஆம் ஆண்டுகளில் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளது.