உலக செய்திகள்
- தென் ஆப்பிரிக்கா நாட்டின் “தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக” இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “ஷமிலா படோஹி” நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான குளோபல் கார்பன் புராஜெக்ட் ஆய்வில் இந்தியாவானது 7 சதவீதம் கார்பன் வெளியேற்றத்துடன் நான்காவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் பிடித்துள்ளது.
தேசிய செய்திகள்
- மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பேராசிரியர் “கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன்” நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஆதாரங்களில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக தொழில் நிறுவனம் – கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முதல் மாநாடு மும்பையில் நடைபெற உள்ளது.
- உள்நாட்டு பாதுகாப்புப் தொழில்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை (IPR – Intellectual Property Right) மேம்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் “ரக்ஷா கயான் சக்தி” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரு மாநகராட்சி பள்ளிகளில் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையான “ரோஷினி” என்னும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஒடிசா அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த “பீத்தா” (PEETHA – Peoples Empowerment Enabling Transparency and Accountability) என்னும் புதிய முன்முயற்சி திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள உலக பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2019-2023 ஆம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.