உலக செய்திகள்
- பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது
- மெசிக்கோ நாட்டின் புதிய அதிபராக ஆண்ட்ரஸ் மானுவேல் பதவியேற்றுக் கொண்டார்.
- உலக அளவில் 4 கோடி பேர் அடிமை தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
- டெல்லியில் காற்று மாசு பிரச்சனையை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
- இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- மூன்று விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது
விளையாட்டு செய்திகள்
- தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னையை சேர்ந்த வீரர் ஆதித்யா கிரி தங்கப் பதக்கம் வென்றார்.