RRB Tamil Current Affairs 31st December 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவில் நடைபெற்ற World Scholar’s Cup 2018 – Junior Debate Championship போட்டியில் சென்னையைச் சேர்ந்த “ஆதி சாய் விஜய்கரன்”(13வயது ) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  2. மத்திய ஆசியாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாடான, துர்க்மெனிஸ்தான் நாடானது தனது சொந்த மற்றும் முதல் துர்க்மென் மொழியில் செய்தி அனுப்பும் செயலியான Biz Barde என்பதை தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. 2018 ஆம் ஆண்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் (Swachh Survekshan 2018 Ranking) திட கழிவு மேலாண்மையில் சிறந்த நகரமாக “ஹைதராபாத்” நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  2. தமிழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, பிரபல மருத்துவர் “சுதா சேஷயன்” என்பவர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. 12-வது உலகளாவிய உடல்நல சுகாதார மாநாடு (GHS – Global Health Care summit – 2018) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.
  4. IRRI (International Rice Research Institute) என்னும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி கழகத்தின் தெற்காசிய பிராந்திய மையம், உத்திரபிரதேச மாநிலத்தின், வாரணாசி நகரில் ஏற்படுத்தப்பட்டது.
  5. வழக்குகளை டிஜிட்டல் வடிவத்தில் குறியாக்கம் செய்வதற்காக டெல்லி போலீஸ் “இ-மல்கானா” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  6. ஐ.நா உலக சுகாதார அமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் “காசநோய் இல்லாத தமிழகம் 2025” என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ஆவங்கார்ட் (Avangard) என்ற புதிய அணுசக்தி ஹைபர்சோனிக் ஏவுகணையை (new hypersonic nuclear weapon delivery system/hypersonic glide vehicle) ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Previous Post Next Post