உலக செய்திகள்
- எதிரி நாட்டினை உளவு பார்க்கவும், குண்டு வீசவும் மேம்பட்ட உளவு விமானத்தை சீனா தயாரித்துள்ளது. விங் லூங் ஐ டி ((Wing Loong I D)) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் சுமார் 45 அடி நீளம் கொண்டது.
தேசிய செய்திகள்
- ஒடிஷா மாநிலத்தில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக “KALIA” என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. (KALIA – Krushak Assistance for livelihood and Income Augmentation)
- சமீபத்தில் காலமான, தமிழ் மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களது வரலாற்று புதினமான “வானம் வசப்படும்” என்ற நாவல் 1995 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- விண்வெளி அடிப்படையிலான இணைய வசதி அளிக்கும் முதல் செயற்கை கோளான “ஹன்ஜியின்”(Hongyun)ஐ சீனாவானது, லாங் மார்ச் 11 இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
- விமானப் போக்குவரத்து அமைச்சகமானது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து “கேஸ் 2019” (GAS 2019) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- 31-வது GST கவுன்சில் கூட்டம் அருண்ஜெட்லி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 பொருட்களுக்கு GST வரி குறைக்கப்பட்டது.
- “ A Rural Manifesto Realizing India’ s Future through her villages” என்ற புத்தகத்தை “வருண் காந்தி” என்பவர் எழுதியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- FIFA உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 97வது இடத்தில் நீடிக்கிறது. ஆசிய அளவில் இந்திய அணி 15வது இடத்தில் உள்ளது.
இரங்கல்
- மெக்சிகோவின் புயெப்லா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்ற மார்தா எரிக்கா அலோன்சோ ((Martha Erika Alonso)), ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.