RRB Tamil Current Affairs 20th December 2018

உலக செய்திகள்
  1. உலக பொருளாதார அமைப்பு (WEF – World Economic Forum) வெளியிட்டுள்ள, பாலின விகிதசார பட்டியல் – 2018ல் இந்தியா 108வது இடத்தைப் பெற்றுள்ளது.
  2. பிரஞ்சு நைட் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருதானது, சினிமாத் தயாரிப்பாளர் “அசோக அமிர்த ராஜ்”க்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. கினியா குடியரசிற்கான புதிய இந்தியாவின் தூதராக C. பருபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தான்சானியாவின் சான்சிபாரில் இந்தியாவின் தூதராக உள்ளார்.
  2. உலக சுகாதார அமைப்பின் (WHO) 4வது உலகளாவிய மருத்துவ உபகரணங்கள் மீதான ‘மருத்துவ உபகரணங்களின் அணுகலை அதிகரித்தல்’ என்ற கருத்தரங்கமானது ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
  3. இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டின் அரசுகளுக்கிடையேயான, இராணுவ தொழில்நுட்பக் கூட்டிணைவு ஆணையத்தின் (India – Russia Inter – Governmental Commission on Military Technical cooperation – IRIGC – MIC) 18வது கூடுகை புதுடெல்லியில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரிகள் வாரியமானது பரிவர்த்தனை செலவினங்களை குறைப்பதற்காகவும், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும் அந்நிய செலவாணி மதிப்பிற்கான நாணயங்களின் பட்டியலில் கொரியாவின் “வோன்” (won) மற்றும் துருக்கியின் “லிரா” (Lira) ஆகியவற்றை சேர்த்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. நொய்டாவில் நடைபெற்ற 75வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டியின், தேசிய ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தை ஜோஷ்னா சின்னப்பா பெற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. சர்வதேச இடம் பெயர்வோர்கள் தினம் – டிசம்பர் 18
Previous Post Next Post