உலக செய்திகள்
- உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு மிக ஆபத்தான நாடு என்ற பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது.
- பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
- சீனாவின் செங்டூவில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் “Hand – in – Hand” என்ற கூட்டு இராணுவப்பயிற்சியை தொடங்கியுள்ளன.
தேசிய செய்திகள்
- 2018 -ம் ஆண்டு உலகிலேயே தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.மேலும் பிரேசில் முதலிடத்தை பெற்றுள்ளது
- இந்திய காவல் பணி அதிகாரியான ராம்பால் பவார் தேசிய குற்ற ஆவண அமைப்பின் (National Crime Records Bureau – NCRB) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மக்களவைச் செயலகத்தின் அசோக் குமார் தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் (National Commission for Scheduled Tribes – NCST) செயலராக பொறுப்பேற்றுள்ளார்.
- இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, SWIFT இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தில் இந்தியாவின் 2வது மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் பிரிவு கொல்கத்தா – பாட்னா ஆகும். இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் கப்பலான ‘‘MV RN தாகூர்’, கங்கையாற்றில் உள்ள (தேசிய நீர்வழி – 1) பாட்னாவின் கெய்காத் IWT முனையத்தை அடையும் முதல் சரக்குக் கப்பலாகும்.
- ஆளுநர் சத்யபால் மாலிக்கால் தலைமை தாங்கப்படும் ஜம்மு & காஷ்மீரின் மாநில நிர்வாகக் குழுவானது பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
- புதுடெல்லியில் பங்குதாரர்களின் கருத்தரங்கின் 4வது பதிப்பானது பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.
- ‘லோக்மாத்’ எனும் செய்தித்தாளால், 2018ம் ஆண்டுக்கான ‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக’ திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட் 7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வர்த்தக செய்திகள்
- இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் வோகோ நிறுவனத்தில் 710 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஓலா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தேசிய கூடைப்பந்து மன்ற சாம்பியனான தங்க மாநில போர்வீரர்கள் அணியானது, 2018ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இம்பாலில் நடந்த விழாவில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை MC மேரி கோமுக்கு, மணிப்பூர் மாநில அரசாங்கம் ‘மீதோயிலெய்மா’ (ராணிக்கு இணையானவர்) பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
- அண்டார்க்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் போலந்து நாட்டின் பியோடர் சுசென்னாவும், பெண்கள் பிரிவில் ரோமா புய்செனாவும் முதலிடம் பெற்றனர். மற்றும் இந்திய வீராங்கனை குர்மித் சோனி பலா 3ம் இடத்தைப் பிடித்தார்.