உலக செய்திகள்
- பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரியனா கிரே, பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- தமிழகம் மட்டுமின்றி தெலங்கானாவிலும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- வங்கி, மொபைல் எண்ணுக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற ஆதார் சட்டத்திருத்தத்துக்கு கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மாலத்தீவுக்கு 9800 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
- 2020-ல் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விமானப் படையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்புக்கு உதவும் ஜிசாட்7ஏ செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது
- விளையாட்டு செய்திகள்
- அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்குப் போட்டியில் பிரேசில் நாட்டின் காப்ரியேல் மெதினா சாம்பியன் பட்டம் வென்றார்.
இரங்கல்
- நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் மூத்த அரசியல்வாதியான துளசி கிரி காலமானார்.