உலக செய்திகள்
- முதன் முறையாக கத்தாரை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு (LNG – Liquified Natural Gas) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
தேசிய செய்திகள்
- அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST – National Commission for ST) புதிய செயலராக “அசோக் குமார் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பசுமை அமைப்புகளுக்கான “கிரீன் கோ தங்க கேடய விருது – 2018” சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF)-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் உயரிய விருதான 2018ம் ஆண்டின் (54வது) ஞானபீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் “அமிதவ் கோஷ்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2018ம் ஆண்டின் தேசிய ஆற்றல் சேமிப்பு தினத்தில் (டிசம்பர் 14), மத்திய ஆற்றல் அமைச்சகமானது மின் வழங்கல் கட்டிடங்களுக்கான எரிசக்தி பாதுகாப்பு ஆணையத்தை (ECO – Niwas Samhita – 2018) புதுடெல்லியில் அமைத்துள்ளது.
- மத்திய கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்கான பாதுகாப்பான கடல்பகுதியை உறுதி செய்வதற்காக கடலோர காவல் படையானது “ஆபரேஷன் ஆலிவா” (Operation Oliva) என்னும் பயிற்சியை தொடங்கியுள்ளது.
- தேசிய தலைநகரப் பகுதியான, தில்லியின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய இரயில்வேயின் தேசிய இரயில் அருங்காட்சியகமானது, தில்லியின் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இணையவெளி குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்புகளுக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் அடிப்படை அறிவை மேம்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகமானது “@cyberDost” என்னும் சுட்டுரை கணக்கை (ட்விட்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது.