உலக செய்திகள்
- இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
- பிரிட்டனின் புகழ்பெற்ற கலைக்கு வழங்கும் உயரிய விருதான டர்னர் – 2018 – விருதானது, கிளாஸ்கோவைச் சேர்ந்த கலைஞர் “சார்லோட் ப்ரோட்கர்” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 175வது எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (Organization of Petroleum Exporting Companies – OPEC) கருத்தரங்கு மற்றும் 5வது OPEC – உறுப்பினர் மற்றும் OPEC உறுப்பினர் அல்லாத நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
- மிசோரம் முதலமைச்சராக ஜோரம்தாங்கா பதவி ஏற்றுக் கொண்டார்.
- ஆளில்லா வான்வழி வாகனங்கள் தயாரிப்பதற்கான இந்தியாவின் முதல் தனியார் துறை அலகு (UAV – Unmanned Aerial Vehicles) தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிற்குள் சர்வதேச முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட “ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடு – 2018 – ஆனது கோவாவில் நடைபெற்றது. (Global Venture Capital Summit – 2018)
- மத்திய அரசின் விவசாயத்துறை சார்பில் வழங்கப்படும் விவசாயத்தின் மேம்பாட்டுக்கான “கிரிஷி கர்மன்” (Krishi Karman Award) விருது “ஜார்கண்ட்” மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- நியூ இந்தியா ஆஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக (Chairman and Managing Director – CMD) அதுல் சஹாய் – என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 2020ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14 (National Energy Conservation Day)
- நாசாவின் “OSIRIS – REX” என்னும் விண்கலமானது, சிறுகோளான பென்னு – வில் (Bennu) நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது.
முக்கிய செய்திகள்
- தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14 (National Energy Conservation Day)