உலக செய்திகள்
- ஸ்லோவேனியா அரசானது தனது இராணுவப் படையின் தலைவராக, பெண் அதிகாரியான, மேஜர் ஜெனரல் “அலென்கா எர்மென்கை” நியமித்துள்ளது.
- மரபியல் சார்ந்த விதைகளின் பயன்பாடுகளை மியான்மரில் உள்ள விவசாயிகளுக்கு தெரியப்படுத்த மற்றும் அந்நாட்டு விவசாயிகளின் திறன் மேம்பாட்டுக்காக, இந்தியா சார்பில் வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் – (ACARE – Advanced Center For Agriculture Research & Education) என்ற உதவித் திட்ட மையத்தை தொடங்கியுள்ளது.
- ஐக்கிய நாடுகளின் கணக்காளர் குழுவின் (UN panel of Auditor) துணைத் தலைவராக இந்தியாவின் தலைமை கணக்காளராக (CAG) உள்ள ராஜிவ் மெஹிரிஷி (Rajiv Mehrishi) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அஷோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- 2018 ஆம் ஆண்டின் சர்வதேச கீதைத் திருவிழாவானது ஹரியானாவின் குருஷேத்திரத்தில் நடத்தப்பட்டது
- இந்திய கடலோரக் காவல் படையானது போர்ட் பிளேர் கடற்பகுதியில் “சுத்தமான கடல் – 2018” என்ற பெயர் கொண்ட பிராந்திய அளவிலான கடல்சார் எண்ணெய் மாசுக் கட்டுப்பாடு எதிர்வினைப் பயிற்சியை நடத்த உள்ளது.
- தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் “தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம்” என்ற புதிய சரக்கு கப்பல் சேவையை தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.