உலக செய்திகள்
- ஆஸ்திரேலியாவில் 102 வயதான மூதாட்டி இர்னே ஓஷியா ( irene oshea ) ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
- கிலிங்கா உலக மண் பரிசு – 2018 (Glinka world Soil Prize – 2018) அமெரிக்கா வாழ் இந்தியர் “ரத்தன் லால் (Rattan Lal) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- உலகில் மிக மோசமான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான ஸ்லம்பர்கில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வரும் 2019ம் ஆண்டிற்குள் பொதுப் போக்குவரத்து தொடர்பான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது.
தேசிய செய்திகள்
- 15வது இந்திய சுகாதார உச்சி மாநாடானது (India Health Summit) இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) ஒருங்கிணைக்கப்பட்டு, புதுடெல்லியில் நடைபெற்றது
- “தி ரைஸ்” (The Rise) என்ற தலைப்பு கொண்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் உச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.
- 2001 – 2010 வரையிலான இந்தியன் கடற்படையின் வரலாற்றைக் கூறும் “நீலக்கடல் புரட்சி” (Blue waters Ahoy) எனும் நூலை கடற்படைத் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லம்பா புது டெல்லியில் வெளியிட்டார்
வர்த்தக செய்திகள்
- பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
- நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ரஷ்யாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் 6 மணி நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.
முக்கிய தினங்கள்
- டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day)