உலக செய்திகள்
- மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மின்காந்த ரயிலை சீனா வடிவமைத்துள்ளது.
- சீனாவின் “பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பில்” (Belt and Road Initiative – BRI) இணைந்துள்ள முதல் மத்திய அமெரிக்க நாடு எனும் பெயரை “பனாமா” நாடு பெற்றுள்ளது.
- வங்கிக்கடன் திவால் நெறிமுறைகள் தொடர்பான மாநாடு (Insolvency and Bankruptcy code of India – New paradigm for stressed Assets) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேரள மாநிலத்தின் கண்ணணூரில் புதியதாக அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் 4 விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
- இந்திய விமானப்படை (IAF – Indian Air Force) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு விமானப்படை ஆகியவற்றிற்கிடையேயான “AVIAINDRA – 2018” என்ற கூட்டு விமானப்படை பயிற்சி இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.
- நீர் முகாமைத்துவத்திற்கான நிலையான கொள்கைகளை மேம்படுத்துவதற்காக, சர்வதேச அளவிலான முதல் “நிலையான நீர் மேலாண்மை” மாநாடு பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் நடைபெற்றது.
- யூனியன் பிரதேசங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் அருங்காட்சியகம் புதுச்சேரி கடற்கரையிலிருந்து அமைய உள்ளது.
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து பெயர்பெற்ற பொருளியல் வல்லுநர் சுர்ஜித் பல்லா விலகியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- நிலவில் பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான, சீனாவின் “சாங் இ -4” (chang’e -4) என்னும் திட்டத்தின் மூலம் சீனாவானது ரோவர் என்னும் விண்கலத்தை “லாக் மார்க் – 3B” என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
- சீனாவின் பய்ஜிங்-ஐ தலைமையகமாகக் கொண்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது, ஆந்திர பிரதேசத்தின் நீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக சுமார் 400 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க உள்ளது.