RRB Tamil Current Affairs 9th November 2018

உலக செய்திகள்
  1. இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் இன்று பதவியேற்றுள்ளார்.
  2. உலகின் டாப் 10 மேஜிக் நிபுணர்கள் மற்றும் மேஜிக் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான(2018 – உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக் நிபுணர்கள்) பட்டியலில் அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. பீகார் மாநிலத்தில் 2018ம் ஆண்டு முதல் பட்டப்படிப்பை முடிக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
  2. சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, 50 நாட்கள் தேசிய சித்தா தினம் கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  3. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 2019ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி பேட்ஸ்மேன் முகமது கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
முக்கிய செய்திகள்
  1. திப்பு சுல்தான் ஜெயந்தி – நவம்பர் 10
Previous Post Next Post