RRB Tamil Current Affairs 8th November 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய, 27 வயதான “சபியா யாசிர்” என்ற பெண் ஒருவர் இடம் பெற உள்ளார்.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத் துறையானது, தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க பணமான 1 டாலர் 15 சென்ட் மதிப்பிலான தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை அளித்துள்ளது.
  2. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்;றுத் திறனாளி பெண்ணான ‘அருணிமா சின்ஹாவிற்கு’ பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
  3. பிபிசியின் (BBC) 100 சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படங்கள் பட்டியலில் சத்ய ஜித்ரேயின் புகழ்பெற்ற காவியமான “பதேர் பாஞ்சாலி” என்ற திரைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
  4. மத்திய அமைச்சரவைக்கு, ரஷ்யாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு உடன்படிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.
  5. உத்திரப் பிரதேச மாநிலத்தின் பைசாபாத் என்னும் மாவட்டத்தின் பெயரை அயோத்தி எனப் பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
  6. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்;டுள்ளது.
Previous Post Next Post