உலக செய்திகள்
- உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, “சிங்கப்பூர் பின்டெக்” என்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
இந்திய செய்திகள்
- அலகாபாத் நகரம் பிரயாக்ராஜாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஃபைஸாபாத் நகரத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
- மாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து, அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில், நவம்பர் 1, 2018 முதல் நவம்பர் 10 வரை ஒரு தீவிரமான தூய காற்றுக்கான பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் 25வது உயர்நீதிமன்றமானது, ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் முதன் முறையாக, பைக் ஆம்புலன்ஸ் சேவை, ஜார்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக, இந்தோ – பிரான்ஸ் முதலீட்டுகளுக்கான முதல் மாநாடு நாக்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா – பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன.
- 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை (Neonatal Mortality Rate – NMR) வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்த தமிழ்நாடு, சிறப்பு விருது ஒன்றை பெற்றுள்ளது.
- மத்திய அரசானது சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான தீகா ராமன், N. சதீஷ் குமார் மற்றும் N. சேஷசாயி ஆகியோர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான பாரீஸ் மாஸ்டர் டென்னீஸ் தொடரில், (Rolex Paris Masters Tennis Tournament), ரஷ்யாவின் கரேன் கச்சனோ, 2ம் நிலை வீரரான, செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் – ஐ (Novak Djokovic) வென்று முதல் முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.