தேசிய செய்திகள்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், psbloansin59minutes.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 59 நிமிடத்தில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- ஜாம்ஷெட்பூரின் நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து 22 வயது இளம் பெண் பாரி, ஆஸ்திரேலிய தூதரகத்தின் தலைவராக ஒரு நாளைக்கு பொறுப்பேற்றுள்ளார்
- பட்டுச் சேலைகளை நவீனமாக புதுப்பிக்க டிஜிட்டல் லைப்ரரி தொடக்கம். மேலும் 240 நெசவாளருக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டம்
வர்த்தக செய்திகள்
- நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 75இலட்சம் பேர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- அமேசான் செல்லர் சர்வீசஸ், ரூ.6287 கோடி இழப்பை சந்தித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக, அந்நாட்டில் மென்பொறியாளராகப் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த இளைஞர் சவுரப் நேத்ராவள்கேர் ((shaurabh netravalker)) நியமிக்கப்பட்டுள்ளார்
- இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டியில் ஏழாவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.