உலக செய்திகள்
- தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
- ஈஸிபோன் பிராண்ட் கைபேசி தயாரிப்பு நிறுவனமான இநோவஸ் (enovus) என்ற நிறுவனமானது குழந்தைகள் பாதுகாப்பாகவும், பெற்றோருடன் இணைப்பில் இருக்கும் வகையில் இந்தியாவின் குழந்தைகளுக்கான முதல் கைபேசியான “ஈஸிபோன் ஸ்டார்” என்ற கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
- தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவராக திரு ஏ எம் நாயக் (Anil Manibhai Naik) என்பவரை நியமித்துள்ளது.
- இந்திய பொறியாளர் மையம் – குவைத் கிளையின் சார்பில் குவைத் நகரில் நடைபெற்ற 51-வது பொறியாளர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநரும், விண்வெளி விஞ்ஞானியுமான ‘மயில்சாமி அண்ணாதுரை”க்கு “செவ்வாய் மனிதன்” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
- தமிழ்நாட்டை சேர்ந்த டாஃபே நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த ஐஎஸ்இகேஐ அண்ட் கோ-வுடன் விவசாயத் துக்குத் தேவையான கருவிகளை உருவாக்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.
- இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டின் செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஃபயியானோ கருணா-வை வென்று நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.