உலக செய்திகள்
- தென் கொரியாவில் நடந்த மேஜிக் செய்பவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த எரிக் செயின் ((Eric Chien)) வெற்றி பெற்றார்.
- அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் நகரில் 13 வது ஜி-20 (G-20) மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்த G-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தேசிய செய்திகள்
- மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
- இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- தேசிய சுகாதார நிறுவனத்தின் படி, ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை, சிறந்த செயலாக்கம் புரிந்த மாநிலகளின் பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- ஆட்டிசம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிப்பதற்கான, இந்தியாவின் முதலாவது ஆட்டிசம் நகரியம் (world – class autism township) மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைய உள்ளது.
வர்த்தக செய்திகள்
- மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- பூமிப் பரப்பை துல்லியமாக படம் பிடிக்கவும், கண்காணிக்கவும் உதவும் அதி நவீன ஹைசிஸ் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது.
- 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
- இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட “HysIS” (Hyperspectral Imaging satellite) என்னும் செயற்கைகோள் மற்றும் வணிக ரீதியிலான 30 செயற்கை கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-43 (PSLV-C43) என்னும் ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவானது, 2018ம் ஆண்டு மே 5ம் நாள் அனுப்பிய உலகின் முதல், ரோபோ விண்கலமான இன்சைட் விண்கலம் 50 கோடி கி.மீ. பயணத்திற்குப் பிறகு நவம்பர் 27 அன்று செவ்வாய் கோளில் வெற்றிகரமாக தரையிரங்கி தனது முதல் செவ்வாய் கோளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 14வது உலககோப்பை ஹாக்கி போட்டியானது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நவம்பர் 28 அன்று தொடங்கியுள்ளது. இப்போட்டியில் இந்தியா உட்பட 16 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ஹாக்கி அணியானது மன்பிரீத் சிங் தலைமையில் பங்கேற்கிறது.