RRB Tamil Current Affairs 27th November 2018

உலக செய்திகள்
  1. மாலத்தீவின் அமைச்சரவையானது 53 நாடுகள் உறுப்பினராக உள்ள காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் உறுப்பினராக இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
  2. ஜம்மு – காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் வங்கியை பொதுத்துறை வங்கியாக நிர்வகிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  3. பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா –விற்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாபில் குருதாஸ்பூருக்கும், பாகிஸ்தானின் கர்தார்பூருக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
  4. மகளிர் குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க வழி செய்வதற்காக, “சஷாக்ட் மகிளா” என்னும் திட்டத்தை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  5. ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில், காவல்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பானது (Bureau of Police Research & Development) ஜார்கண்ட் மாநில காவல்துறையுடன் இணைந்து இரண்டு நாள் மகளிர் காவல்துறைக்கான தேசிய மாநாட்டை (National Conference of women in Police – NCWP) நடத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியாவின் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சமீர் வர்மா சீனாவின் லு – குவாங்ஜீவை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Previous Post Next Post