உலக செய்திகள்
- வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இன்டெர்போல் அமைப்பின் புதிய தலைவராக தென் கொரியாவை சேர்ந்த கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ‘Toxic’’ எனும் அடைமொழிச் சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி அறிவித்துள்ளது. இந்த அடைமொழிச் சொல்லானது “நச்சுத்தன்மை” என்ற பொருளில் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.
- சீன நாடானது, விண்வெளி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஷியான் – 6 என்னும் செயற்கைகோள் மற்றும் 4 சிறியவகை செயற்கைக் கோள்களை “லாங் மார்ச் – 2டி” என்ற ஒரே ராக்கெட் மூலம் வெற்றிகரமாக, விண்ணில் செலுத்தியது.
தேசிய செய்திகள்
- பாலில் கலப்படம் இருந்தால் இனி ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதரா பாத் ஐஐடி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
- இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே முதலீடுகளை அதிகரித்தல், விவசாய ஆராய்ச்சி, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திறன் மேம்பாட்டு திட்ட அலுவலகம் சார்பில், பெங்களுரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில், விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கையில் இஸ்ரோவுடன் கைகோர்த்துச் செயல்படுவதற்கு உற்பத்தி முகமைகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, விண்வெளி உற்பத்திப் பொருள் உச்சி மாநாடு நவம்பர் 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
- வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டிணைவு குறித்த 2 நாள் நடைபெறும் இந்திய – கிர்கிஸ்தான் அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் 9வது அமர்வு புதுடெல்லியில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
- இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் (ராய்) சார்பில், 8-வது சென்னை சில்லரை வர்த்தக மாநாடு சென்னையில் நடைபெற்றது.
- மிகப்பெரிய அளவில் உள்ள வாராக் கடன்களை சரி செய்வதற்காக ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தை (AMC – Asset Management Company) உருவாக்குவதாக சுனில் மேத்தா குழு அறிவித்துள்ளது. இந்த AMC-ன் பெயர் இந்திய சஷாகட் சொத்து மேலாண்மை நிறுவனமாகும்.
விளையாட்டு செய்திகள்
- ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 6 முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, பத்மபூஷண் விருது பெற்ற முதல் அமெச்சூர் வீராங்கனை என பல சாதனைகளை முதன்முதலாகப் படைத்தவர் மேரிகோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
- ரஷ்யாவின் சக்திவாயந்த ராணுவ உளவுத் துறையின் (ஜிஆர்யு) தலைவர் இகார் கோரபோவ் (62) மரணம் அடைந்தார்.