RRB Tamil Current Affairs 22nd November 2018

உலக செய்திகள்
  1. உள்நாட்டு மக்களுக்கான தொழில்சார் பயிற்சிகள், கல்விமுறை மற்றும் மொழிதிறன் வளர்ப்பு போன்றவற்றில் அவர்களின் திறமைகளை வளர்க்க ஒரு நாடு எந்த அளவில் முதலீடு செய்திருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய “உலக திறமையான நாடுகள் – 2018” உலகளாவிய ஆய்வில் இந்தியாவானது மொத்தம் 63 நாடுகளில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது.
  2. எரித்ரியா மீது சுமத்தப்பட்ட பல்வேறு தடைகளை விலக்கிக் கொள்வதற்கு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 2018ல், ஐ.நா. பாதுகாப்பு குழுவானது(UNSC – United Nations Security Council) ஒப்புதல் அளித்துள்ளது.
  3. ஸ்டீபன் பார்க்லே வை, பிரெக்ஸிட் (BREXIT) அமைப்பின் புதிய செயலாளராக பிரிட்டன் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம், இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
  2. மத்திய மற்றும் மாநில புள்ளியியல் அமைப்புகளின் 26வது மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த மாநாடானது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  3. இந்தியாவின் யானைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவமனை உத்திரப் பிரதேசத்தில் மதுராவில் உள்ள சுர்முரா கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது வைல்ட்லைப் Sos (wildlife Sos) என்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
  4. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான “இந்திரா காந்தி விருது” (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான “CSE”–க்கு (அறிவியல் – சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
  1. தேசிய மத நல்லிணக்க கொடிநாள் – நவம்பர் 25


Previous Post Next Post