உலக செய்திகள்
- உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசிக்கு நியுயார்க் நகரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது மற்றும் மொராக்கோவின் முதல் அதிவேக இரயில் பாதையானது டேன்ஜியரில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மொராக்காவின் மன்னர் ஆறாம் முகம்மது ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பைத்தான் தாலூகாவில் உள்ள வாஹிகாவொன் மற்றும் தனகாவொன் கிராமங்களில் 2-வது மெகா உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர் சிம் ரத் கவுர் பாதல் தொடங்கி வைத்துள்ளார்.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், ‘புதார்’ என்ற இணையதளத்தை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணைப் போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு “புதார்” என்ற 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது.
- இந்தியாவில் சமூகப்பணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய விவகாரங்களை கலந்துரையாடுவதற்காக சமூக அளவில் சகோதரத்துவத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, இந்திய சமூகப் பணி மாநாடு-இன் (Indian Social Work Congress) ஆறாவது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
- இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது(HSRC – Himalayan State Regional Council).
வர்த்தக செய்திகள்
- பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஹெச்டிஎப்சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.1,100 கோடி வீட்டுக் கடன் மானியத்துக்கு செலவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- செர்பியாவின் நோவி சாட் என்ற நகரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், தமிழ்நாட்டின் கார்த்திகேயன் பாண்டியன் முதலிடத்தை வென்று, இந்தியாவின் 57-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
- 2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் நாட்டின் நசோமி ஒஹீரா “(Nozomi okuhara), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தென்கொரியா நாட்டின் “சன் வான் ஹோ” (Son wan – ho) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.