உலக செய்திகள்
- இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- 33வது ASEAN உச்சிமாநாடு சிங்கப்பூரில் தொடங்கியது. இதில் ASEAN அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூடி பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
- பிரான்ஸின் உயரிய குடிமகன்களுக்கான விருதான ‘நைட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ என்ற விருது ஜவஹர் லால் சரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- டெல்லி மாநில அரசானது, உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் Jashn-e-Virasat-e-Urdu என்ற விழாவை கன்னாட் பிளேசில் உள்ள சென்டல் பூங்காவில் கொண்டாடி வருகிறது.
- ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.
- 2019 பொதுத் தேர்தலுக்காக பொது விவாதங்கள் மற்றும் குடிமை நிர்வாகப் பணிகளில், பங்களிப்புகளை ஊக்குவித்து இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் #Power of 18 என்ற பிரச்சாரத்தை டிவிட்டர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
- விமானப் பொறியியல் மற்றும் தளவாடங்களின் வளர்ந்து வரும் போக்கு என்ற கருத்தின் மீதான இரண்டு நாள் கருத்தரங்கு (AVIAMAT- 2018) புது டெல்லியில் நடைபெற்றது.
- மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலுள்ள பீரங்கிப்படை மையத்தில், அமெரிக்காவின் தயாரிப்பான M777 155mm/39 Calibre Ultra Light Howitzer மற்றும் தென் கொரிய தயாரிப்பான K9 VAJRA-T 155mm/53 ஆகிய பீரங்கிகள் இந்திய இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
விளையாட்டு செய்திகள்
- உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) உலக ஆடவர் மல்யுத்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆடவர் 65 கி.கி பிரிவில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலம் அமைப்புப் பணி 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.
- IIT-ரூர்க்கியின் அறிவியலாளர்கள் புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறியவும் அழிக்கவும் கூடிய ஒளிரும் கார்பன் பொருளை உருவாக்கியுள்ளனர்.
முக்கிய தினங்கள்
- உலக நீரிழிவு தினம் – நவம்பர் 14