உலக செய்திகள்
- இந்தியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை, அமைதிப் பணிகளுக்காக அணு ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு, இராஜ தந்திர மற்றும் அலுவல் ரீதியான கடவுச் சீட்டுகளுக்கான விசா நடைமுறையில் தளர்வு ஆகிய 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
தேசிய செய்திகள்
- இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயலதிகாரி ஆசிஷ் சவுத்ரி ((Ashish Chowdhary)) நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு இணையம் மூலம் வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC – Appointment Committee of the Cabinet) மூன்று மூத்த இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளான “ K. டாஷ், அகிலேஷ் ரஞ்சன் மற்றும் நீனாகுமார்” ஆகியோரை நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (CBDT – Central Board of Direct Taxes) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
- ஒடிசா அரசானது விவசாயிகளால் நீர்ப்பாசனத்தின் சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க “சவுரா ஜல்நிதி திட்டம்” என்பதைத் தொடங்கியுள்ளது.
- ஒடிசா மாநில அரசானது 2018 ஆம் ஆண்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- தனியார் நிறுவனங்களின் மூலம் சில்லறை வர்த்தக மேலாண்மை மற்றும் புதிய கிளைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளுக்காக எஸ்.சி. (SC – Scheduled Caste) மற்றும் எஸ்.டி (ST – Scheduled Tribe) சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கர்நாடக சமூக நலத்துறையானது “சம்ரூத்தி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, குடியிருப்புப் பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை வணிகப் பயன்பாடுகளுக்கு திசை திருப்பப்படுவதைத் தவிரப்பதற்காக ‘ஒற்றை முறை கடவுச்சொல்’ (OTP – One Time Password)முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI – Securities and Exchange Board of India) தமிழ்நாட்டில் மலிவான வீடுகள் பிரிவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நிதியத்தை துவங்குவதற்கு தமிழக அரசிற்கு அனுமதி அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3-D2 ராக்கெட், தகவல் தொடர்புக்கான ஜிசாட் 29 செயற்கைக் கோளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விளையாட்டு செய்திகள்
- சீனாவின் ஜினானில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் போட்டியான இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஜீ ரெட்டியை 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆசிய ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதலாவது இந்திய வீரராக பங்கஜ் அத்வானி உருவெடுத்துள்ளார்.