உலக செய்திகள்
- சிங்கப்பூர் - இந்தியா கப்பல்படைகளின் 25-வது கூட்டுப்பயிற்சி அந்தமானில் தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
- குஜராத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை, 5 நாள்களில் 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்கப்படும் முதலாவது சரக்குக் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தொடங்கிவைக்கிறார்
- ஜம்மு காஷ்மீரில் வரலாற்று புகழ் மிக்க மொகலாயர் சாலை 10 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது
- தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க 2ஆம் கட்டமாக 56,750 டன் மணல் இறக்குமதி செய்ய முடிவு
வர்த்தக செய்திகள்
- சீனாவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, ஒன்றரை நிமிடத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்து சாதனைப்படைத்துள்ளது
- 8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது.
- சீனாவில் திருமணம் ஆகாதவர்களுக்கான தின கொண்டாட்டத்தின் போது 16 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் விற்பனையாகி இருப்பதாக அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இத்தாலியில் நடைபெற்ற நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சித்சிபாஸ் வெற்றி பெற்றார்