உலக செய்திகள்
- JIMEX-18 – இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படைக்களுக்கிடையேயான கூட்டுப் போர் பயிற்சியின் (JIMEX-18) மூன்றாவது பதிப்பு அக்டோபர் 07 முதல் 15 வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
- அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
தேசிய செய்திகள்
- இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக (ககன்யான் திட்டம்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் ரஷ்ய விண்வெளித்துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- ரிசர்வ் வங்கியானது மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த, இன்போசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ், கேப்ஜெமினி டெக்னாலஜி, இண்டியா, ஜ.பி.எம்-இந்தியா, லார்சன் & ட்யூப்ரோ இன்ஃபோ டெக் ஆகிய ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
- மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தின் (PMGSY – Pradhan Mantri Gram Sadak Yojana) கீழ் 2800 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ.816 கோடி) கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய விமானப்படை தொடங்கப்பட்ட 86-ஆவது ஆண்டு விழா உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹிண்டன் விமானப் படை நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
- மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது விமான நிலையங்களில் பயணிக்களுக்கான முக அங்கீகார அடிப்படையிலான டிஜிட்டல் செயல்பாட்டுக் கொள்கையான “Digi Yatra” (டிஜி யாத்ராவை) வெளியிட்டுள்ளது.
- இந்த முன் முயற்சியானது காகிதமற்ற மற்றும் தடங்கலற்ற விமானப் பயணத்தை ஊக்குவிக்க முற்படுகிறது.
- நாட்டில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஸ்வச் சரவெக்ஷன் கிராமின் விருது – 2018 சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- வங்க தேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.