உலக செய்திகள்
- இந்தியப் பெருங்கடல் மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு (International Conference on Indian Ocean) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
- சீனா – ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக வரும் அக்டோபர் 24ம் தேதி ஜூகாய் – மகோ பாலம் திறக்கப்பட உள்ளது. 55 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது.
தேசிய செய்திகள்
- தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய முதலாவது பள்ளியாக போரூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
- பாதுகாப்பான உணவை உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தலைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசானது ‘ஸ்வச் பாரத் யாத்ரா’ (Swachh Bharat Yatra) என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- பயிர்க் கதிர்கள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக 3 கைப்பேசி செயலிகளை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து உருவாக்கிய “பெபிகொலம்போ” விண்கலம் அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- வானிலும், நீரிலும் செலுத்தக்கூடிய உலகின் மிகப்பெரிய விமானமான ஏஜி-600 (AG-600)-ஐ சீனா-வானது அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
- இந்திய கட்டிடத் துறையில் புதுமையான அமைப்புகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்த அனுமோலு ராமகிருஷ்ணனின் சுயசரிதையான ‘பில்டிங் எ லெகஸி’ (Building a Legacy) என்னும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.