உலக செய்திகள்
- சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைப் பரிமாறிக் கொள்வது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ருமேனியா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
தேசிய செய்திகள்
- சர்வதேச நாடுகளின் சபையான ஐ.நா., இந்தியாவுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் எனப்படும் SDS (Sustainable Development Goals) இன் முதல் இளம் வர்த்தக சாம்பியனாக (First Youth Business Championship) மானசி கிர்லோஸ்கரை (Manasi Kirloskar) தேர்வு செய்துள்ளது.
- இந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்’ (India’s First Methanol Cooking Fuel Program), அசாம் மாநிலத்தில் நாம்ரூப் நகரில் அசாம் பெட்ரோலிய நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஸ்வச்சதா ஹை சேவா (Swachhta Hi Seva) என்ற கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தூய்மையான வளாகத்திற்கான தரநிலைகளை (Swachh Campus ranking) அறிவித்துள்ளது.
- இந்திய மெடல்கள் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளைப் பிரிவால் (IMPacT) வழங்கப்படும் உயரிய விருதான, 2018ம் ஆண்டிற்கான 26வது ஏகலபியா விருது (Ekalabya Award – 2018) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரரான லீலிமா மின்ஸ் பெற உள்ளார்.
நியமனங்கள்
- இந்திய தலைமைப் புள்ளியியல் அலுவலராக ‘பிரவீன் ஸ்ரீவஸ்தவா’ (Chief Statistician of India) நியமிக்கப்பட்டுள்ளார் முன்னதாக இப்பொறுப்பில் இருந்த டி.சி.ஏ ஆனந்த், என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் பிரவீன் ஸ்ரீவஸ்தவா, 2020 ஆகஸ்ட் வரை அப்பதவியில் இருப்பார்.
- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரிசையில் அட்டானிக் ஜெனரலுக்கு அடுத்தபடியாக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு, “துஷார் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
- உலக மனநல தினம் (World Mental Health Day) – அக்டோபர் 10