RRB Tamil Current Affairs 10th October 2018

உலக செய்திகள்
  1. மெக்சிகோவில் நடைபெறவிருக்கும் 46வது சர்வதேச செர்வன்டினோ திருவிழாவில் முதல் முறையாக இந்தியாவானது மரியாதை விருந்தினராக பங்கேற்றுள்ளது.
  2. சிரியா நாட்டில் பணியாற்றும் தனது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிரியாவிற்கு நிலத்திலிருந்து வான்வெளியை தாக்கும் ஏவுகணை அமைப்பான S-300-ஐ ரஷ்யா அளித்துள்ளது.
இந்திய செய்திகள்
  1. அணுகுண்டு உள்ளிட்ட 1000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, சுமார் 350 கி.மீ. தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட “பிரித்வி – 2” ஏவுகணை ஒரிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மொபைல் சாலஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும் திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை அழித்ததும் இதன் சிறப்பம்சமாகும்.
  2. 2018ம் ஆண்டிற்கான மின்னணு முறையிலான வழங்கீட்டை ஏற்றுக் கொள்ளும் அரசு தரவரிசைப் பட்டியலில் (GEAR – Government e-payment Adoption Ranking) 78 நாடுகளில் இந்தியா 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
  3. ஆட்டோ மற்றும் வாடகை வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மைசூர் நகர காவல் துறையானது “மை சூரக்ஷா” (My Suraksha) மொபைல் செயலியைத் தொடங்கியுள்ளது.
  4. ஜெனீவாவின் ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் ‘பங்கஜ் ஷர்மா’ நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. இந்திய ரிசர்வ் வங்கியினால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும், இந்த ஆண்டுக்கான 4வது பணக்கொள்கை சம்பந்தமான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.
  2. இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியானது (SIDBI – Small Industries Development Bank of India) தேசிய அளவிலான தொழில் முனைவோர் பிரச்சாரமான ‘உதயம் அபிலாஷா’-வை தொடங்கியுள்ளது. (National level entrepreneurshim awareness campaign – Udyam Abhilasha)
Previous Post Next Post