உலக செய்திகள்
- அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான ஜாக் மா ஓய்வுபெற்றார்
- பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
- இந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- SLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் நடைபெறுகிறது .
- 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கும் உலக இந்து காங்கிரஸ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
- கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
- 2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் இந்தியர்கள் 3ம் இடத்திலும் உள்ளனர் என சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
- சர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.
வர்த்தக செய்திகள்
- மிகப் பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.