RRB Tamil Current Affairs 2nd September 2018

உலக செய்திகள்
  1. நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு ஆயூர்வேத அமைச்சர் Shripad Yesso Naik (Minister of State For AYUSH) தலைமையில் நெதர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
  2. 2018ம் ஆண்டின் தலைமை பொறுப்பு வகித்த நேபாளத்தில் சமீபத்தில் 4-வது BIMSTEC மாநாடு நடைபெற்றது. 5வது BIMSTEC மாநாடு – 2019ல் இலங்கையில் நடைபெறுவதை அடுத்து, தலைமை பொறுப்பு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
  3. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறை இன்புளுயின்சா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்காக ஹாரிசான் – 2020 என்ற ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை சத்திரபதி சிவாஜி “மஹாராஜ்” சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  2. மத்தியப் பிரதேசத்தில் நீர்பாசனம் மற்றும் அமைப்பின் திறன் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக $375 மில்லியன் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
  3. மத்திய மின்சாரத்துறை மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் K. சிங் ‘இந்திய மின் அமைப்பிற்கான வானிலைத் தகவல் வாயில்’ என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது துருவநிலை செயற்கைகோள் ஏவு வாகனம் (PSLV – Polar Satellite Launch Vehicle) மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவு வாகனம் (SSLV – Small Satellite Launch Vehicle) ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளது.
Previous Post Next Post