உலக செய்திகள்
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் நிலையான விவசாய வேளாண்மைக்கு நிதியளித்தல் உலகளாவிய (Financing Sustainable Agriculture; Global Challenges and Opportunities) சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு-வை ஐக்கிய நாடுகள் அழைத்துள்ளது.
- ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய கடற்பயிற்சியான KAKADU – 2018-ன் 14வது பதிப்பு ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் ஆகஸ்ட் 29-முதல் செப்டம்பர் 18 வரை நடைபெற உள்ளது.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ் நாடுகள்) இணைந்து உருவாக்கிய NDB – New Development Bank) எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கிகக்கு சர்வதேச தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (S & P) நிறுவனம் இந்த வங்கிக்கு ஏஏ பிளஸ் (AA Plus) தரச் சான்றை வழங்கியுள்ளது.
- ஆசியாவன் நோபல் பரிசு என்றழைக்கப்படும் இராமன் மகசேசே என்னும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களான மும்பையைச் சேர்ந்த ‘பரத் வட்வானி’ மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ‘சோனம் வாங்க்’ உட்பட 6 பேருக்கு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற விழாவில் இராமன் மகசேசே விருது’ ஆகஸ்ட் 31 அன்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- ரயில்வே பணிமனைகளிலும், உற்பத்திப் பிரிவுகளிலும், டெப்போக்களிலும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்திய ரயில்வேயும், இந்திய எரிவாயு ஆணையமும் ரயில் பவனில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
- அரசு மின்னணு சந்தை (Government e Marketplace (GeM) ) குறித்த தேசிய இயக்கம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்படும்.
- நீதிபதி தருண் அகர்வால் மேகலாய உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி நீதிபதி வசிப்தருக்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மற்றும் சாதனைகளுக்கான அடல் தரவரிசை((Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) ) என்றும் புதிய தரவரிசை முறையை மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ((All India Council of Technical Education (AICTE)) , புது டெல்லியில் தொடங்கியுள்ளது.
- வோடோபோன் – ஐடியா இணைப்பு நிறைவடைந்தது.இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமாக வோடோபோன் ஐடியா மாறியுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உத்திரப் பிரதேச மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது.
- குடியிருப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்டின் (EESL – Energy Efficiency Services Limited) திறனை அதிகரிக்கும் விதமாகவும் வணிக நிதிக்கான அணுகலை அதிகரிக்கவும், இந்தியா, உலக வங்கியிடம் 220 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்தியா மற்றும் ஆசியன் (ASEAN) நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய 6வது பிராந்திய வரிவான பொருளாதார கூட்டு(RCEP – Regional Comprehensive Economic Partnership) என்னும் வர்த்தக மந்திரிகள் மாநாடு (6th RCEP Trade Minister Meeting) சிங்கப்பூரில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் முதல் காலாண்டில் 2 சதவீகிதமாக இருக்கிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனும், உஸ்பெகிஸ்தான் வீரருமான ஹசன்பாய் டஸ்மட்டோவை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.