உலக செய்திகள்
- சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்கா நியமிக்கப்பட்டுள்ளார்
- வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை சமீபத்தில் குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து நகரங்களில் ஆறாவது இடத்தில் இந்தியத் தலைநகரான டெல்லி உள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரம் முதலிடத்திலும், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரம் 2-ம் இடத்திலும் உள்ளது.
- இந்திய அமெரிக்கரான விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் அருள் சின்ணையான் (Prof Arul Chinnaiyan), அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தினால் வழங்கப்படும் “சிறந்த புலனாய்வாளர் விருது” (Outstanding Investigator Award) பெற்றுள்ளார்
தேசிய செய்திகள்
- வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங் களுக்குப் பிறகு ஓடி வசதி ரூ. 5 ஆயிரத்துக்கு வழங்கப்பட்டது. பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
- நாட்டிலேயே முதன் முறையாக ஐம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய வேலியை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த லேசர் வேலி அமைப்போடு கண்காணிப்பு கேமராக்களும் அமைத்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் 1994–ல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களை வெளி நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக கூறி கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ அவரை விடுவித்தது.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் 1994–ல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களை வெளி நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக கூறி கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ அவரை விடுவித்தது.
- ஒடிஷா மாநிலத்தில் “நாவாகை” (Nuakhai) என்னும் விவசாயத் திருவிழா தொடங்கியுள்ளது
- சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் உள்ள அபூஐகமத் பழங்குடிகள் பற்றிய ஆங்கில புத்தகம் “Bastar Dispatches A Passage Through the wilds” என்ற பெயரில் “நரேந்திரா” என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
- கென்யன் எலியட் கிபோகேவ் பேர்லினில் (ஜெர்மனி) ஒரு புதிய மராத்தான் உலக சாதனையை அமைத்தார்.
- போல்ந்து நாட்டில் உள்ள கிளிவிஸ் நகரில் மகளிருக்கான 13-வது சில்சியன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் மேரி கோம் கஜகஸ்தானின் அகிரிம் கஸனாயேவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
- துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அஹ்மத் கோமெர்ட் குத்துச்சண்டை தொடரில் மகளிருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் இறுதி சுற்றில் துருக்கியின் சீமா கலிஸ்கானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
- அகில இந்திய அளவிலான 92-வது எம்சிசி–முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
- தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்ற 52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (52nd ISSF World Championship), இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கத்துடன் மொத்தம் 27 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
- சர்வதேச ஐனநாயக தினம் – செப்டம்பர்15