உலக செய்திகள்
- 2006ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நாடோடி யானை-2018 (Nomadic Elephant 2018) யின் 13வது பதிப்பு மங்கோலியா தலைநகரான உலான்பட்டர் பகுதியில் தொடங்கியுள்ளது.
- இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான விஸ்டோக்-2018 போர் ஒத்திகையை ரஷியா தொடங்கி உள்ளது.
- நாகாலந்து மாநில அரசனது சிங்பன் வனவிலங்கு சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
- இந்திய மற்றும் பங்களாதேஷ் இடையேயான மூன்று திட்டங்களை பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.
- ஹரியானா அரசு ரூ. 900 கோடி ரூபாய் செலவில் பானிபட் நகரின் பொஹலி கிராமத்தில் எத்தனால் ஆலையை அமைக்க இந்திய எண்ணெய் கழகத்துடன் (IOC) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
- தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த விண்வெளி ஆடையை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.
விளையாட்டு செய்திகள்
- தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 38 வயதான கே.சகாயபாரதி, அணி கள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நடந்தது.