உலக செய்திகள்
- மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் புதுதில்லியில் அங்கீகாரம் குறித்த 4வது உலக மாநாட்டைத் (4th World Summit-World Summit on Accreditation (WOSA-2018)) தொடங்கி வைத்தார்.
- MILEX-18 முதல் BIMSTEC நாடுகளின் ராணுவ பயிற்சி செப்டம்பர் 10 முதல் 16, 2018 வரை மகாராஷ்டிரா, புனேயில் உள்ள ‘ஆந்‘ வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் நடக்கின்றது. இதில் இந்தியா உட்பட BIMSTEC உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்று உள்ளன.
தேசிய செய்திகள்
- டெல்லி அரசு Doorstep delivery of services என்ற புதிய திட்டத்தை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.
- தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் கிராமத்தில் 4 வது திறந்த வெளி சிறைச்சாலை விரைவில் தொடங்கப்படவிருக்கிறது
- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உலகளாவிய துப்புரவு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
- புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்க உச்சி மாநாட்டின் (SIAM –Society of Indian Automobile Manufacturers) போது மத்திய அரசாங்கம் மின் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளால் இயங்கும் தானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
- தடகள வீராங்கனையான ஹேமா தாஸ் அசாம்-இன் விளையாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தமிழ்நாட்டின் திண்டுகல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2017-18 ஆம் ஆண்டிற்கான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய புளு அணி நடப்பு சாம்பியனான இந்திய ரெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
- விளையாட்டுத் துறையில் இந்தியா-ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவை வலுப்பெறச் செய்வதற்கான பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது ரஷிய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.