உலக செய்திகள்
- குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட்அணியின் கால்பந்தாட்டவீரர் “லூகா மாட்ரிக்” UEFA-ன் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுள்ளார்.
- முதல் SAARC நாடுகளின் வேளாண் கூட்டுறவு வணிக மன்ற கூடுகை (Agriculture Cooperative Business Forum) காத்மாண்டு, நேபாளத்தில் துவங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
- உலகின் மிகப்பெரிய வெளிப்படையான புதியனகாண் இயக்கத்தின் மூன்றாவது பதிப்பு – ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019-(SIH) என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
- மத்திய பிரதேச மாநிலத்தின் நீர்பாசன மறைகள் மற்றும் அவற்றின் திறன்களை அதிகரித்து அம்மாநிலத்தில் உள்ள ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 375 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி(ADB) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- டெல்லியில் நடைபெற்ற Google for India – வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக ‘புராஜெக்ட் நாவலேகா’ என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
வங்கி செய்திகள்
- உலக வங்கி ராஜஸ்தானிற்கு ‘‘24 × 7 மின்சார வழங்கல்’ திட்டத்திற்காக 250 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- 2019-ன் ஆண்டின் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா நடத்த உள்ளது.
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் தங்கப் பதக்கம் வென்றார்
- மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சித்ரா உன்னிகிருஷ்ணன் போட்டி தூரத்தை 4 நிமிடம் 56 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.
- இந்திய அணியில் ஹிமா தாஸ், பூவம்பா ராஜு, விஸ்மயே கொரோத், சரிதாபென் கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் கொண்ட அணி பந்தைய தொலைவை 3 நிமிடங்கள் 28 வினாடிகள், 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.
- மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீமா பூனியா26 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் அசோக், கணபதி செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவின் அர்பிந்தர் சிங்77மீ தொலைவுத் தாண்டி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.